Paristamil Navigation Paristamil advert login

Bouygues காட்சியறையில் ஆயுதமுனையில் கொள்ளை! - நால்வர் கைது!!

Bouygues காட்சியறையில் ஆயுதமுனையில் கொள்ளை! - நால்வர் கைது!!

3 மார்கழி 2023 ஞாயிறு 19:00 | பார்வைகள் : 8823


Venette (Oise) நகரில் உள்ள Bouygues தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு சொந்தமான காட்சியறையில் கொள்ளையிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

avenue de l'Europe வீதியில் உள்ள குறித்த காட்சியறைக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.45 மணி அளவில் ஆயுதங்களுடன் வருகை தந்த கொள்ளையர்கள், அங்கு பணிபுரியும் ஊழியர்களை மிரட்டி, பல பொருட்களை கொள்ளையிட்டனர். பெறுமதியான தொலைபேசிகளை கொள்ளையிட்டுக்கொண்டு தப்பிச் சென்றனர்.

கொள்ளைச் சம்பவத்தின் போது அங்கு வாடிக்கையாளர்கள் சிலரும் இருந்ததாக அறிய முடிகிறது. 

கொள்ளையர்கள் Volkswagen Golf மகிழுந்து ஒன்றில் தப்பிச் சென்ற நிலையில், Seine-Saint-Denis மாவட்டத்தில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். நால்வர் கொண்ட கொள்ளையர்கள் குழு காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்