இலங்கையில் மாவீரர் நாளில் கலந்துகொண்ட பலர் கைது - அமெரிக்கா கவலை

4 மார்கழி 2023 திங்கள் 02:32 | பார்வைகள் : 6900
இலங்கையில் இடம்பெறும் பயங்கரவாத தடைச்சட்ட கைதுகள் தொடர்பில் அமெரிக்க காங்கிரஸ் கவலை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்னர்கள் தெரிவிக்கையில்,
“தமிழர்கள் அமைதியான முறையில் மேற்கொண்ட நினைவுகூரலிற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வடக்குகிழக்கு மக்கள் கை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ் மக்கள் தங்களது உறவுகளின் நினைவுகூரலை தடுக்கும் நோக்கிலும், இந்நிகழ்வினை குழப்புவதற்காகவும் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து மிகுந்த கவலையடைகின்றோம்.
இலங்கையில் வாழும் அனைத்து தரப்பு மக்களினதும் உரிமைகளை நிலைநாட்டுமாறு இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றேன்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த கைது நடவடிக்கைகள் தமிழர்களின் நினைவுகூரல்களை தடுக்க முயலும் இலங்கை பொலிஸாரின் நடவடிக்கைகள் வரலாற்றின் தொடர்ச்சியான நடவடிக்கைகளாகும்” என தெரிவித்தார்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1