Paristamil Navigation Paristamil advert login

பரிசில் வீடற்றோர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு!

பரிசில் வீடற்றோர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு!

4 மார்கழி 2023 திங்கள் 09:37 | பார்வைகள் : 4676


குளிர்காலம் ஆரம்பித்துள்ள நிலையில், பரிசில் தங்குமிடம் இன்றி வீதிகளிலும், பூங்காக்களிலும், மெற்றோ சுரங்கங்களிலும் படுத்து உறங்குபவர்களின் எண்ணிக்கை கவலை அளிக்கும் விதமாக உள்ளது. கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் அவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிசில் தற்போது 3,000 இற்கும் அதிகமானோர் வீதிகளில் படுத்து உறங்குகின்றனர். சென்ற ஆண்டை வித 16% சதவீதத்தால் இந்த எண்ணிக்கை அதிகமாகும். இவர்களில் 450 சிறுவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, Lyon, Rennes, Marseille மற்றும் Bordeaux நகரங்களிலும் இந்த வீடற்றவர்களின் எண்ணிக்கை கவலையளிக்கும் விதமாக உள்ளது. நாடு முழுவதும் 7,572 பேர் இந்த குளிர் காலத்தில் தங்குமிட கோரிக்கைக்காக 115 அவசர இலக்கத்தை தொடர்பு கொண்டுள்ளனர்.

வீடற்றவர்களில் 2,373 சிறுவர்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்