பரிஸ் : காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி பயணித்த சாரதி மீது துப்பாக்கிச்சூடு!
4 மார்கழி 2023 திங்கள் 14:40 | பார்வைகள் : 3940
காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி பயணித்த சாரதி ஒருவரை நோக்கி காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
15 ஆம் வட்டாரத்தின் rue Robert-Lindet வீதியில் இன்று திங்கட்கிழமை காலை காவல்துறையினர் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, Renault Clio மகிழுந்து ஒன்றை சந்த்நெகத்தின் பேரில் தடுத்து நிறுத்தினர். ஆனால் மகிழுந்து நிற்கால் தொடர்ந்து பயணித்துள்ளது. மேலும், காவல்துறையினரின் மகிழுந்துடன் மோதி விபத்தை ஏற்படுத்தியது.
பின்னர் மகிழுந்து தொடர்ந்து பயணிக்க, காவல்துறையினர் அதனை துரத்திச் சென்றனர். சில நிமிடங்களில் காவல்துறையினர் மகிழுந்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, சாரதியை கைது செய்தனர். துப்பாக்கிச்சூட்டில் சாரதி காயமடையவில்லை.
சாரதி மதுபோதையில் மகிழுந்து செலுத்தியிருந்தமை தெரியவந்துள்ளது. இருந்தபோதும் அவரது மகிழுந்தில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் எதுவும் இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.