Paristamil Navigation Paristamil advert login

யாழில் அச்சுறுத்தும் டெங்கு - பொது மக்களுக்கு எச்சரிக்கை

யாழில் அச்சுறுத்தும் டெங்கு - பொது மக்களுக்கு எச்சரிக்கை

4 மார்கழி 2023 திங்கள் 14:48 | பார்வைகள் : 1732


யாழ் மாவட்டத்தில் இந்த வருடத்தின் இறுதிவரையான காலப்பகுதியில் 2203 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டதுடன் இரண்டு இறப்புக்களும் பதிவாகியுள்ள நிலையில் காய்ச்சல் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த செய்தி குறிப்பில்,யாழ் மாவட்டத்தில் இந்த வருடத்தின் செப்ரெம்பர் மாதத்தில் 110 டெங்கு நோயாளிகளும், ஒக்டோபர் மாதத்தில் 118 டெங்கு நோயாளிகளும் நவம்பர் மாதத்தில் 427 டெங்கு நோயாளிகளும் டிசம்பர் மாதத்தின் முதல் மூன்று நாட்களில் 82 டெங்கு நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

நவம்பர் மாதத்தில் கூடிய டெங்கு நோயாளர்கள் நல்லூர், யாழ்ப்பாணம், கோப்பாய் மற்றும் சண்டிலிப்பாய் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலேயே இனங்காணப்பட்டுள்ளனர்.

நவம்பர் மாதத்தில் அதிகூடிய டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்ட நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் செப்ரெம்பர் மாதத்தில் 19 டெங்கு நோயாளர்களும் ஒக்டோபர் மாதத்தில் 23 டெங்கு நோயாளர்களும் நவம்பர் மாதத்தில் 108 டெங்கு நோயாளர்களும் டிசம்பர் மாதத்தின் முதல் மூன்று நாட்களில் மாத்திரம் 34 டெங்கு நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொக்குவில், கோண்டாவில், திருநெல்வேலி மற்றும் வண்ணார்பண்ணை ஆகிய பிரதேசங்களில் இருந்து இனங்காணப்பட்டுள்ளன. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்