Paristamil Navigation Paristamil advert login

யாழில் பால் புரையேறி பச்சிளம் குழந்தை பலி

யாழில் பால் புரையேறி பச்சிளம் குழந்தை பலி

5 மார்கழி 2023 செவ்வாய் 06:58 | பார்வைகள் : 4848


பால் புரையேறி பிறந்து 26 நாட்களேயான குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

யாழ்ப்பாணம், மிருசுவில் வடக்கு கொடிகாமம் பகுதியிலேயே இந்த சம்பவம் நேற்று முன்தினம் பதிவாகியுள்ளது.

குறித்த குழந்தை பிறந்தது தொடக்கம் வைத்தியசாலையிலேயே இருந்து வந்துள்ள நிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

பால் சுவாசக் குழாயினுள் சென்றதால் மரணம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த குழந்தையின் சடலம் நேற்றைய தினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

வர்த்தக‌ விளம்பரங்கள்