சீனாவில் தீவிரமாக பரவும் மர்ம வைரஸின் 8 அறிகுறிகள்
5 மார்கழி 2023 செவ்வாய் 07:15 | பார்வைகள் : 3325
சீனாவில் நுரையீரலை தாக்கும் புதிய வகை வைரஸ் அதிதீவிரமாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் NHS மருத்துவர் ஒருவர் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த வாரங்களில் வேகமாக பரவிவரும் புதிய வகை வைரசானது நுரையீரலை தாக்குகிறது.
மர்மமான நிமோனியா வைரஸாக பார்க்கப்படும் இந்த வைரஸ் ஐரோப்பா நாடுகளிலும் நுழைந்துவிட்டது.
இது பெரியவர்களை காட்டிலும் குழந்தைகளை அதிகம் தாக்குவதாக தெரியவந்துள்ளது.
கொரோனாவை போன்று மற்ற நாடுகளுக்கு பரவ வாய்ப்பு இருப்பதால் உலக சுகாதார நிறுவனம் கவனம் செலுத்தி வருகின்றதுடன் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
இந்நிலையில் டென்மார்க் மற்றும் நெதர்லாந்தில் குறிப்பிட்ட வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சீனாவில் ஒரே வாரத்தில் 100 லிருந்து 100,000ஆக பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இதன் அறிகுறிகளாக
அதீத உடலின் வெப்பநிலை
இதயத்துடிப்பு சீராக இல்லாமல் இருத்தல்
வறட்டு இருமல்
வியர்வை
பதற்றம்
நெஞ்சில் குத்துவது போன்ற வலி
மூச்சுவிடுவதில் சிரமம்
குழப்பம் போன்றவை அறிகுறிகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிருமித்தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்டால் அதிகபட்சம் இரண்டு அல்லது நான்கு வாரங்களில் சரி ஆக கூடிய வாய்ப்பு உள்ளதாகவும், அதுவே குழந்தைகள் அல்லது பெரியவர்களாக இருப்பின் மருத்துவமனையில் முறையான சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.