Paristamil Navigation Paristamil advert login

உலகிலுள்ள குகை வீடுகள்

உலகிலுள்ள குகை வீடுகள்

5 மார்கழி 2023 செவ்வாய் 07:36 | பார்வைகள் : 2677


குகைக்குள் கட்டப்பட்ட தனித்துவமான வீடுகள் குகை வீடு என்ற சிறப்பில் உலகம் முழுதும் விசித்திர குகை வீடுகள் பல காணப்படுகின்றன.

கப்டோசியா குகை
வீடுகள் துருக்கியின் மென்மையான எரிமலை  பாறைகளுக்கிடையில் செதுக்கப்பட்ட இந்த குகை வீடுகள் தனித்தன்மை பொருந்திய அடையாளங்களாகும்.

துனிசியா இல் அமைந்திருக்கும் இந்த குடியிருப்புகள் பல நூறு ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட குகை வீடுகள் ஆகும்.


தனித்துவமான அமைப்புக்கு பெயர் பெற்ற இந்தக் குடியிருப்புகளை ஹாலிவுட் படங்கள் பலவற்றில் நாம் கண்டிருக்கலாம்.


டெரின்குயு
துருக்கி நாட்டில் அமைந்திருக்கும் இந்தக் குகை வீடுகள் குடியிருப்புக்கு மடடுமல்லாது தேவாலயங்கள் மக்கள் கூடும் இடங்கள் என குகைக்குள் பல சிறப்பம்சங்களை கொண்ட இடமாகவும் அறியப்படுகிறது.

சாக்ரோமாண்டே குகைகள்
ஸ்பெயின் நாட்டில் அமைந்திருக்கும் இந்தக்குகைகள் குடியிருப்புக்கு மட்டுமல்லாது அதன் கலாச்சார அமைப்பு சார்ந்த கட்டமைப்புக்கும் பெயர் பெற்ற இடமாகும்.

குவாட்டிக்ஸ் குகை வீடுகள்
ஸ்பெயின் நாட்டிலுள்ள மற்றொரு விசித்திர இடமான குவாடிக்ஸ் வீடுகள் அதன் தனித்துவமான தோற்றம் மற்றும் கலை நயத்திற்குப் பிரசித்திப்பெற்ற இடமாகும்.

பெட்ரோ
ஜோர்தான் நாட்டில் அமைந்திருக்கும் பாரம்பரியமிக்க பாறை செதுக்கல்களுக்கு பெயர் பெற்ற இடமாகும்.

ஹசன்கீப் குகைகள்
துருக்கி நாட்டிலுள்ள ஹசன்கீப் குகைகள் பல நூற்றாண்டு வரலாற்றை தன்னுள் கொண்டிருக்கும் வீடுகள் ஆகும்.

இவை அழிந்துவரும் பாரம்பரியங்களை காத்துவரும் ஒரு இடமாகவும் கருதப்படுகிறது.

மாடாரோ குகைகள்
இத்தாலி நாட்டில் அமைந்திருக்கும் மாடாரோ குகைகள் பல நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்டிருந்ததுடன் தற்போது நவீன வசதிகளுடன் தங்குமிடமாகக் காணப்படுகிறது.    

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்