ஹமாஸ் அமைப்பினரை கடுமையாக சாடும் இஸ்ரேல் வழக்கறிஞர்
5 மார்கழி 2023 செவ்வாய் 08:04 | பார்வைகள் : 2970
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனுக்கிடையிலான போர் நாளாந்தம் தீவிரமடைந்து வருகின்றது.
இதேவேளையில் பெண்கள் மீதான வன்கொடுமையை ஹமாஸ் ஆயுதமாக பயன்படுத்துவதாக குற்றம் சுமத்தியுள்ளார் இஸ்ரேல் பெண் உரிமைக்காக போராடும் வழக்கறிஞரான Ruth Halperin-Kaddari.
இரு தரப்பினருக்கான போருக்கு மத்தியில், பல பெண்கள் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதை காணொளிகளின் மூலம் சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்த முடிவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஹமாஸின் தாக்குதல்களிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக புதர்களில் மறைந்து இருந்தவர்கள்.
பெண் ஒருவர் பல ஆண்களால் துன்புறுத்தப்படுவதையும் நேரில் பார்த்த சாட்சியங்கள் இருப்பதாகவும் குறிப்பிடுகிறார்.
இதன்படி, ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட சாட்சிகள் மற்றும் மருத்துவர்களிடம் இது தொடர்பான வாக்குமூலங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இஸ்ரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், கூட்டு வன்புணர்வு காரணமாக உயிரிழந்தவர்கள் தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதம் 7 ஆம் திகதி முதல், ஹமாஸின் வன்முறைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும், இது தொடர்பான கூற்றுக்களை ஒப்புக் கொள்ள சில ஐ.நா அமைப்புகள் தவறியுள்ளமை தம்மை கோபப்படுத்துவதாகவும் ரூத் ஹல்பெரின்-கடாரி கூறியுள்ளார்.
பெண்கள் தமது இயக்கத்தால் வன்புணர்வுக்குட்படுத்தப்படுவதை ஹமாஸ் இயக்கம் நிராகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.