28 ஆவது தடவையாக மக்ரோனின் அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லா பிரேரணை! - வாக்கெடுப்பு!!
5 மார்கழி 2023 செவ்வாய் 09:00 | பார்வைகள் : 3403
பிரதமர் Élisabeth Borne இன் அரசாங்கம் மீது 28 ஆவது தடவையாக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரப்பட்டிருந்தது.
அவரது தலைமையிலான அரசு தொடர்ச்சியாக வாக்கெடுப்பு இன்றிய 49.3 எனும் அரசியலமைப்பு சட்டத்தை பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டப்பட்டு அரசாங்கம் மீது La France insoumise கட்சியினர் இந்த நம்பிக்கை இல்லா பிரேரணையை கொண்டுவந்தனர். இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை இரவு இது தொடர்பாக பாராளுமன்றத்தில் வாக்கெடுக்கப்பட்டது.
289 வாக்குகள் அல்லது அதற்கு அதிகமாக பதிவாகியிருந்தால் இந்த நம்பிக்கை இல்லா பிரேரணை ஏற்றுக்கொள்ளப்படும் எனும் நிலையில், நேற்றைய நாளில் நூற்றுக்கும் குறைவான வாக்குகளே பதிவாகியிருந்தன. மக்ரோனின் அரசாங்கம் மீது கொண்டுவரப்பட்டிருந்த 28 ஆவது நம்பிக்கை நம்பிக்கை இல்லா பிரேரணை இதுவாகும்.
போதிய ஆதரவு வாக்குகள் இல்லாததால் சபாநாயகர் இந்த பிரேரணையை நிராகரித்தார்.