ஒரு மில்லியன் யூரோக்கள் வென்ற நபர் - பணத்தை சேகரிக்க மறந்த சோகம்!!

5 மார்கழி 2023 செவ்வாய் 10:23 | பார்வைகள் : 8900
Euromillions அதிஷ்ட்டலாப சீட்டிழுப்பில் ஒரு மில்லியன் யூரோக்கள் வெற்றி பெற்ற ஒருவர், அந்த பணத்தொகையை பெற்றுக்கொள்ள முன்வரவில்லை. அவருடைய கால அவகாசம் நிறைவடைந்து பணத்தினை இழந்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை டிசம்பர் 3 ஆம் திகதி இத்தகவலை FDJ (Euromillions நிறுவனத்தின் தாய் நிறுவனம்) இடம் இருந்து அறிந்துகொண்டோம். கடந்த ஒக்டோபர் 3 ஆம் திகதி வெற்றி பெறப்பட்ட இந்த தொகையை பெற்றுக்கொள்ள இரண்டு மாத அவகாசங்கள் வழங்கப்பட்டிருக்கும். நேற்று முன்தினம் டிசம்பர் 3 ஆம் திகதி இரவு 11.59 மணிக்குள்ளாக தனது பணத்தொகையை பெற்றுக்கொள்ள முன்வந்திருக்கவேண்டிய வெற்றியாளர், Euromillions நிறுவனத்தினரை தொடர்புகொள்ளவே இல்லை.
குறித்த வெற்றியாளரின் நகரல் துல்லியமாக அறிய முடியவில்லை. தெற்கு Reunion தீவுப்பகுதில் குறித்த வெற்றிக்கான சீட்டி விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என Euromillions தெரிவித்துள்ளது.