Paristamil Navigation Paristamil advert login

Drancy : கத்திக்குத்து தாக்குதலில் பெண் பலி!

Drancy : கத்திக்குத்து தாக்குதலில் பெண் பலி!

6 மார்கழி 2023 புதன் 16:36 | பார்வைகள் : 7609


Drancy நகரில் வசிக்கும் 55 வயதுடைய பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளார். அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

27 வயதுடைய ஒருவர் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் தனது 55 வயதுடைய தாயை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். 14 வயதுடைய சிறுவன் ஒருவன் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் காவல்துறையினரை அழைத்ததை அடுத்து Drancy (Seine-Saint-Denis) நகர காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அங்கு குடும்ப வன்முறையில், குறித்த 27 வயது நபர் தனது தாயாரைக் கொன்றுள்ளமை தெரியவந்துள்ளது. இரத்த வெள்ளத்தில் தாய் இறந்து கிடந்துள்ளார். அவருடைய 14 வயது மகன் குளியலறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.

தாக்குதலாளியை கைது செய்ய காவல்துறையினர் பெரும் போராட்டம் நடத்த வேண்டி ஏற்பட்டது. தாக்குதலாளி மிகவும் ஆக்ரோஷமாக செயற்பட்டதுடன், காவல்துறையினரையும் தாக்கியுள்ளார். இச்சம்பவத்தில் நான்கு காவல்துறையினர் காயமடைந்தனர்.

30 செ.மீ நீளமுடைய கத்தி ஒன்றே தாக்குதலுக்கு பயன்படுத்தியுள்ளார். மேற்படி சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்