பேரிச்சம்பழ கேக்
5 மார்கழி 2023 செவ்வாய் 14:30 | பார்வைகள் : 2379
சர்க்கரை மற்றும் வெல்லம் சேர்க்காமல் பேரீச்சம்பழத்தை வைத்து நம்மால் வீட்டிலேயே அசத்தலான சுவையில் கேக் செய்ய முடியும். உங்களுக்கு குட்டீஸ் இருந்தால், நீங்கள் இந்த கேக்கை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். இது கண்டிப்பாக அவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்
பால்- அரை லிட்டர்
பேரிச்சம்பழம்- 100 கிராம்
வால்நட்- 2 ஸ்பூன்
பேக்கிங் சோடா- கால் டீஸ்பூன்
ஆயில்- 2 ஸ்பூன்
கோதுமை மாவு- 250 கிராம்
செய்முறை
முதலில் ஒரு பவுலில் பாலை ஊற்றி அதில் பேரிச்சம் பழத்தை அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும். அதன்பிறகு ஊற வைத்த பேரிச்சம்பழத்தை மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுக்க வேண்டும். பின்னர் அதில் எண்ணெய் ஊற்றி மீண்டும் அடிக்க வேண்டும். இது ஒரு பேஸ்ட் மாதிரி இருக்கும். இதனுடன் மீண்டும் பால் ஊற்றி அடித்து எடுக்க வேண்டும்.
இந்த கலவையை மீண்டும் அதே பவுலில் போட்டு அதில் கோதுமை மாவு, பேக்கிங் சோடா மற்றும் வால்நட் சேர்த்து நன்றாக கலந்து கேக் டிரேயில் ஊற்ற வேண்டும்.
இப்போது ஒரு குக்கரில் அடியில் பொடி உப்பு போட்டு அடுப்பில் 15 நிமிடம் ஃப்ரிஹீட் செய்ய வேண்டும். அதன்பிறகு உள்ளே ஒரு ஸ்டாண்ட் வைத்து அதில் கேக் டிரேயை வைத்து மூடிபோட்டு வைக்க வேண்டும். (விசில் போடக்கூடாது) குறைந்தது 45 நிமிடத்திற்கு வேக வைக்க வேண்டும். அதன் பிறகு திறந்து பார்த்தால் சுவையான பேரிச்சம் பழ கேக் தயார்.