Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : மீள் குடியேற்றப்பட்ட அகதிகள்!

பரிஸ் : மீள் குடியேற்றப்பட்ட அகதிகள்!

5 மார்கழி 2023 செவ்வாய் 18:27 | பார்வைகள் : 7238


பரிஸ் 10 ஆம் வட்டாரத்தில் பாதுகாப்பாற்ற முறையில் வசித்த அகதிகள் பலர் இன்று காலை வெளியேற்றப்பட்டு வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டனர்.

Quai de Jemmapes மற்றும் Boulevard de la Villette பகுதிகளில் சிறிய கூடாரங்களில் வசித்த 243 அகதிகளே இன்று காலை வெளியேற்றப்பட்டனர். அவர்கள் இல் து பிரான்சின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வருடத்தில் பரிசில் இடம்பெறும் 34 ஆவது அகதிகள் வெளியேற்ற நடவடிக்கை இதுவாகும். இதுவரை 6,343 அகதிகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்