இலங்கையில் முதல் டிஜிட்டல் பிறப்புச்சான்றிதழ்
6 மார்கழி 2023 புதன் 04:56 | பார்வைகள் : 2649
இலங்கையில் முதலாவது டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் நேற்றைய தினம் வழங்கப்பட்டதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
களுத்துறை மாவட்ட செயலகத்தில் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தலைமையில் டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டதாக அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், கழுத்துறையில் ஆரம்பிக்கப்பட்ட டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் வேலைத்திட்டம் ஏனைய மாவட்டங்களுக்கு துரிதமாக விரிவுபடுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய சர்வதேச தரத்திற்கமைய வழங்கப்படும் தேசிய பிறப்புச் சான்றிதழில் பதிவிடப்பட்டுள்ள இலக்கம் தேசிய அடையாள அட்டை இலக்கமாக மாற்றப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒரு குழந்தை பிறக்கும்போதே அடையாள எண்ணைக் கொடுத்து அதன் மூலம் மக்கள் தொகைப் பதிவேட்டை உருவாக்க முடியுமென உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.