EuroMillions : இதுவரை இல்லாத பெரும் தொகை பணம்! - வெள்ளிக்கிழமை சீட்டிழுப்பு!!

6 மார்கழி 2023 புதன் 07:00 | பார்வைகள் : 11190
EuroMillions அதிஷ்ட்டலாபச் சீட்டில் இதுவரை வெற்றிபெறப்படாத மிகப்பெரும் தொகை ஒன்று சீட்டிழுக்கப்பட உள்ளது.
வரும் வெள்ளிக்கிழமை இடம்பெற உள்ள இந்த சீட்டிழுப்பில் வெற்றி பெறும் நபர் ₤240 மில்லியன் யூரோக்கள் தொகையை வெற்றி பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையானது இதுவரை EuroMillions வரலாற்றில் வெல்லப்படாத மிகப்பெரிய தொகையாகும்.
நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சீட்டிழுப்பில் ₤217 மில்லியன் யூரோக்கள் வெற்றித்தொகை நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த வெற்றித்தொகையை யாரும் வெல்லவில்லை. 4-6-20-24-25 ஆகிய இலக்கங்களுடன், 5 மற்றும் 9 ஆகிய நட்சத்திர இலக்கங்களும் வெற்றி இலக்கமாக தேர்வானது. அந்த இலக்கங்களை எவரும் பெறவில்லை என்பதால், அத்தொகையுடன் இவ்வாரத்துக்கான பணமும் சேர்க்கப்பட்டு மொத்தமாக ₤240 மில்லியன் யூரோக்கள் வெற்றிக்காக காத்திருக்கிறது.
இதற்கு முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பிரித்தானியாவைச் சேர்ந்த ஒருவர் 230 மில்லியன் யூரோக்கள் வெற்றிபெற்றிருந்தார். அதுவே முன்னதாக EuroMillions வரலாற்றில் வெல்லப்பட்ட அதிகூடிய தொகையாகும்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1