Ivry-sur-Seine நகரில் காணாமல் போன சிறுவன், சுவிட்சர்லாந்தில் மீட்பு!!

6 மார்கழி 2023 புதன் 09:00 | பார்வைகள் : 9434
கடந்த நவம்வர் 17 ஆம் திகதி Ivry-sur-Seine (Val-de-Marne) நகரில் காணாமல் போன சிறுவன் ஒருவன் சுவிட்சர்லாந்தில் வைத்து பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளான்.
15 வயதுடைய சிறுவன் ஒருவரே வீட்டில் இருந்து வெளியேறி காணாமல் போயிருந்தான். மனநோய் என சொல்லப்பட்டும் ஆடிசம் நோயினால் பீடிக்கப்பட்டிருந்த குறித்த சிறுவன் கடந்த நவம்பர் 17 ஆம் திகதி காணாமல் போயிருந்தான். பின்னர் அவன் டிசம்பர் 5 ஆம் திகதி, நேற்று செவ்வாய்க்கிழமை சுவிட்சர்லாந்தில் வைத்து பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுவன் காணாமல் போவது இது முதன் முறையல்ல. முன்னதாக செப்டம்பரில் காணாமல் போயிருந்த அவன் Normandy நகரில் வைத்து மீட்கப்பட்டிருந்தான்.
குறித்த சிறுவனின் தாயார், மிகுந்த மன உளைச்சலையும் கவலையையும் வெளிப்படுத்தியுள்ளார்.