Paristamil Navigation Paristamil advert login

யாழில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு - இருவர் கைது

யாழில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு - இருவர் கைது

6 மார்கழி 2023 புதன் 10:05 | பார்வைகள் : 8518


யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமையன்று தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வானில் வந்த இனந்தெரியாத குழுவினர் மோட்டார் சைக்கிள் வந்த இளைஞர் மீது சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல் நடத்தினர்.

இதன்போது பொலிஸ் நிலையம் முன்பாக பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் வாள்வெட்டு குழுவை துரத்திச் சென்ற போது வேனில் குறித்த குழு தப்பிச் சென்றது.

சந்தேகநபர்களை கைது செய்யும் நோக்கில் பொலிஸார் மல்லாகம் பகுதியில் வாகனத்துக்கு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

இதன்போது மல்லாகம் விசாலாட்சி வித்தியாலயம் அருகிலுள்ள வீதியிலிருந்து வாள்கள் மற்றும் துப்பாக்கி ரவைகள் என்பவற்றை பொலிஸார் மீட்டனர்.

வாள்வெட்டில் காயமடைந்த 28 வயதான இளைஞர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தெல்லிப்பழை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்த னர்.

இந்நிலையில், வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்கான இளைஞரின் வாக்குமூலத்திற்கமைய குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் இரண்டு வன்முறை கும்பலுக்கு இடையில் நீண்ட காலமாக நிலவி வரும் மோதல் சம்பவத்தின் தொடர்ச்சியே இந்த வாள்வெட்டு சம்பவம் என பொலிஸாரின் மேலதிக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்