காசாவில் மருந்துப் பொருட்களை அகற்றுமாறு உத்தரவிட்ட இஸ்ரேல்....?
6 மார்கழி 2023 புதன் 10:28 | பார்வைகள் : 2986
தற்காலிக போர் நிறுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து இஸ்ரேல் மீண்டும் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
காசாவின் 400கும் மேற்பட்ட பகுதிகளில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந் நிலையில், தற்போது உலக சுகாதார அமைப்பு கூறிய விடயம் ஒன்றை இஸ்ரேல் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
அதாவது, இஸ்ரேல் படைகளிடம் இருந்து, 'தெற்கு காசாவில் உள்ள எங்கள் மருத்துவக் கிடங்கில் இருந்து 24மணிநேரத்திற்குள் எங்கள் பொருட்களை அகற்றவேண்டும், இல்லையென்றால் தரைவழி நடவடிக்கைகள் பயன்படுத்த முடியாதவையாக இருக்கும்' என்று கூறப்பட்டதாக WHO தெரிவித்தது.
இந்த நிலையில் இஸ்ரேல் இதனை மறுத்துள்ளது. அவ்வாறு உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை என தெரிவித்துள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சக அமைப்பான COGAT தனது எக்ஸ் பக்கத்தில்,
'உண்மை என்னவென்றால், கிடங்குகளை காலி செய்யும்படி நாங்கள் உங்களைக் கேட்கவில்லை.
மேலும் நாங்கள் சம்பந்தப்பட்ட ஐ.நா பிரதிநிதிகளுக்கும் தெளிவுபடுத்தினோம் (எழுத்துபூர்வமாக)' என குறிப்பிட்டுள்ளது.