Paristamil Navigation Paristamil advert login

Porte de la Chapelle : மரநடுகை பணி தீவிரம்!!

Porte de la Chapelle : மரநடுகை பணி தீவிரம்!!

6 மார்கழி 2023 புதன் 10:53 | பார்வைகள் : 3191


Porte de la Chapelle பகுதியில் மரநடுகை பணி துரிதகதியில் இடம்பெற்று வருகிறது. ஒலிம்பிக் போட்டிகளை இலக்கு வைத்து அப்பகுதியில் மரங்களால் சூழப்பட உள்ளது.

rue de la Chapelle வீதியின் இரு பகுதிகளிலும் நான்கு மீற்றர் அகலம் கொண்ட மிதிவண்டி பாதைகளும், நடைபாதையும் உருவாக்கப்படும் என பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ முந்த தேர்தலின் பிரச்சாரத்தின் போது உறுதியளித்திருந்தார். அதன் ஒரு பகுதி வேலை தற்போது இடம்பெற்று வருகிறது.

மொத்தமாக 162 மரங்கள் அங்கு நடப்பட உள்ளன. அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருவதை நீங்கள் காணலாம். Marx Dormoy இல் தொடங்கி Porte de la Chapelle நிலையம் வரை இந்த மரங்கள் நடப்பட உள்ளன. விறகுகளுக்காக வளர்க்கப்படும் மேப்பிள் (maple) மரங்களே அங்கு நடுகைக்கு உட்படுத்தப்பட உள்ளன. அதன் அதிகபட்ச வளர்த்தி 30 மீற்றர்களாகும்.

புவி வெப்பமடைதலை தடுக்கவும், நிலத்தடி நீரை பாதுகாக்கவும் மரங்கள் நடுவதை விட சிறந்த செயல் இல்லை என பரிஸ் நகர துணை முதல்வர் தெரிவித்தார்.

இந்த மர நடுகைக்காக மொத்தமாக 50 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்