ஜேர்மன் சுகாதாரத்துறை பொது மக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை
6 மார்கழி 2023 புதன் 12:20 | பார்வைகள் : 3426
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகள் நெருங்கிவருகின்றது.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாகவே, கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்ளுமாறு ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சரான Karl Lauterbach, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் மூன்று வாரங்கள் இருக்கின்றது.
இந்நிலையில் எளிதில் பாதிப்புக்குள்ளாகும் அபாயத்திலிருப்போர் சீக்கிரமாக கோவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.
பண்டிகை காலத்தில் மக்கள் அதிக அளவில் கூடும் நிலை உள்ளதால், இப்போதே தடுப்பூசி பெற்றுக்கொண்டால், போதுமான அளவில் தடுப்பூசி திறம்பட செயல்பட அது உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.