மதுபானங்களுக்கு அதிக வரி விதிக்க WHO வலியுறுத்தல்
6 மார்கழி 2023 புதன் 13:24 | பார்வைகள் : 8698
மதுபானங்கள் மற்றும் சர்க்கரை இனிப்பு பானங்கள் மீதான வரிகளை அதிகரிக்க உலக நாடுகளை உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கையில்,
ஆரோக்கியமற்ற பொருட்கள் மீதான சராசரி உலகளாவிய வரி விகிதம் குறைவாக உள்ளது.
வரிகளை உயர்த்துவது ஆரோக்கியமான மக்கள்தொகைக்கு வழிவகுக்கும்.
மதுபானங்கள் மற்றும் சர்க்கரை-இனிப்பு பானங்களுக்கு அதிக கலால் வரி விதிக்கப்பட வேண்டும். மது அருந்துவதால் ஆண்டுக்கு 26 லட்சம் மக்கள் இறக்கின்றனர்.
80 லட்சத்துக்கு அதிகமானோர் ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்வதால் இறக்கின்றனர்.
மதுபானங்கள், சர்க்கரை-இனிப்பு பானங்கள் மீதான வரியை அமல்படுத்துவது இந்த இறப்புகளைக் குறைக்கும்.
இது இந்த தயாரிப்புகளின் பயன்பாட்டைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான தயாரிப்புகளை உருவாக்க நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும். ஆரோக்கியமற்ற பொருட்களுக்கு வரி விதிப்பது ஆரோக்கியமான மக்களை உருவாக்குகிறது.
மதுபான விஷயத்தில், வன்முறை மற்றும் சாலை போக்குவரத்து பாதிப்புகளைத் தடுக்கவும் வரி உதவுகிறது.
மதுபானங்கள் தொடர்ந்து மலிவு விலையில் வருவது கவலை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளது.


























Bons Plans
Annuaire
Scan