போதைப்பொருள் கடத்தல் கும்பல் கைது! - ₤500,000 பணம், 188 கிலோ கஞ்சா மீட்பு!!
6 மார்கழி 2023 புதன் 18:00 | பார்வைகள் : 2962
நீண்டகாலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த எட்டு பேர் கொண்ட குழு ஒன்றை நேற்று செவ்வாய்க்கிழமை நீஸ் (Nice) நகர காவல்துறையினர் கைது செய்தனர். ஏராளமான பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
நீஸ் நகரில் இவ்வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய கைது சம்பவம் இது என அம்மாவட்ட காவல்துறை தலைமை அதிகாரி தெரிவித்தார். போதைப்பொருள் விற்பனை அமோகமாக இடம்பெறுவதாகவும், குறிப்பாக சிறுவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையாகுவதாகவும் பொதுமக்கள் பலர் கருத்து தெரிவித்ததை அடுத்து, காவல்துறையினர் அது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவந்தனர்.
அதன் முடிவி, நேற்று செவ்வாய்க்கிழமை அதிரடியாக களம் இறங்கிய காவல்துறையினர், எட்டுப்பேர் கொண்ட குழுவை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து €492,000 ரொக்கப்பணம், இரண்டு கைத்துப்பாக்கிகள், ஒரு அரை தானியங்கி துப்பாக்கியும், 188 கிலோ கஞ்சா, 1.7 கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருள் போன்றன மீட்கப்பட்டன.
நீஸ் நகரின் புறநகரில் வைத்து இந்த போதைப்பொருட்களை நகரின் பெரும்பாலான நகரங்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.