வடகொரிய பெண்களிடம் கோரிக்கையை முன்வத்த கிம் ஜாங் உன்
7 மார்கழி 2023 வியாழன் 02:56 | பார்வைகள் : 2853
வடகொரியாவில் குழந்தை பிறப்பு வீதம் கடந்த 10 ஆண்டுகளில் குறைந்துவருகிறது.
ஆகவே, தயவு செய்து தாய்மார்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்துள்ளார்.
மனித வளம் இல்லாவிட்டால், நாட்டுக்காக உழைப்பதற்கு பணியாளர்கள் கிடைக்கமாட்டார்கள்.
அதனால் நாட்டில் பொருளாதாரமே பாதிக்கப்படக்கூடும்.
ஆகவேதான் அப்படி ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார் கிம் என்கின்றன சில ஊடகங்கள்.
பெண்களுக்கான நிகழ்ச்சி ஒன்றில் கிம் பங்கேற்ற நிலையில், பெண்கள் அதிகம் குழந்தைகளை பெற்றுக்கொள்ள முன்வரவேண்டும் என கோரிக்கை வைத்தார்.
சில ஊடகங்கள், கிம் அப்படி கோரிக்கை வைக்கும்போது கண்ணீர் விட்டதாக செய்தி வெளியிட, அந்த செய்தியும் அது தொடர்பான வீடியோவும் வைரலாகி வருகின்றன.