Paristamil Navigation Paristamil advert login

பாகிஸ்தான் பாடசாலை அருகே குண்டு வெடிப்பு...

 பாகிஸ்தான் பாடசாலை அருகே குண்டு வெடிப்பு...

7 மார்கழி 2023 வியாழன் 03:07 | பார்வைகள் : 5550


பாகிஸ்தானில் கைபர் பக்துங்க்வா மாகாணம் பெஷாவர் நகரில் தொடக்க பாடசாலை அருகே  பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்துள்ளது.

இந்த தாக்குதலில் 4 மாணவர்கள் உள்பட 7 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. 

மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 

இது தொடர்பில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

வர்த்தக‌ விளம்பரங்கள்