சர்ச்சைக்குள் சிக்கிய பிரதமர்! - பாராளுமன்றத்துக்குள் சிகரெட் புகைத்தாரா??!!
7 மார்கழி 2023 வியாழன் 07:00 | பார்வைகள் : 3546
பிரதமர் Élisabeth Borne பாராளுமன்றம் சென்றாலே அது சர்ச்சைக்குரிய விடயமாகவே மாறுவிடுகிறது. 49.3 சட்டமூலம் பயன்படுத்தி அவ்வப்போது சர்ச்சைக்குள் சிக்கும் பிரதமர், இம்முறை பாராளுமன்றத்தில் சிகரெட் புகைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் 5 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. பிரதமர் Élisabeth Borne இலத்திரணியல் சிகரெட் ஒன்றை இழுக்கும் காட்சி ஒன்றை பாராளுமன்ற புகைப்படக்கலைஞர் Jacques Witt புகைப்படமாக பதிவு செய்துள்ளார். அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களோடு உரையாடிக்கொண்டிருக்கும் போது அவர் இந்த சிகரெட்டினை இழுத்துள்ளார்.
இலத்திரணியல் சிகரெட்டினை பிரான்சில் தடை விதிப்பதற்குரிய வாத பிரதிவாதங்கள் பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பிரதமரின் இந்த செயல் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.