காஸாவுக்கு 600 தொன் உணவுகள் அனுப்பும் பிரான்ஸ்!!
7 மார்கழி 2023 வியாழன் 09:00 | பார்வைகள் : 3144
யுத்தப் பிடியில் சிக்கிக்கொண்டுள்ள காஸா பகுதி மக்களுக்கு உதவும் வகையில் 600 டொன் உணவினை பிரான்ஸ் அனுப்ப உள்ளது.
பிரான்சின் வெளியுறவுத்துறை அமைச்சர் Catherine Colonna, இதனை நேற்று புதன்கிழமை தெரிவித்தார். கடல்வழியாக காஸா நோக்கி விரைவில் இந்த உணவுப் பொருட்கள் அனுப்பப்பட உள்ளன.
நேற்று புதன்கிழமை இணையவழியூடாக இடம்பெற்ற சர்வதேச மனிதாபிமான மாநாட்டில் பங்கேற்ற அவர், அதன்போதே இதனைக் குறிப்பிட்டார்.
முன்னதாக பிரான்ஸ் காஸாவுக்கு 200 தொன் உலர் உணவுகளும், இரு தடவைகள் மருத்துவ உதவிகளும் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.