Paristamil Navigation Paristamil advert login

இலங்கை  கிரிக்கெட் அணியில் உயர்மட்ட ஆலோசகராக சனத் ஜெயசூரிய

இலங்கை  கிரிக்கெட் அணியில் உயர்மட்ட ஆலோசகராக சனத் ஜெயசூரிய

7 மார்கழி 2023 வியாழன் 08:35 | பார்வைகள் : 3815


இலங்கை கிரிக்கெட் அணியின் உயர்மட்ட ஆலோசகராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் தலைவருமான சனத் ஜெயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் உயர் செயல்திறன் நிலைய ஆலோசகர் பதவி ஜெயசூரியவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை கிரிக்கெட் அணியிலிருந்து ஓய்வு பெற்ற நான்கு வீரர்களை கொண்டு புதிய கிரிக்கெட் தெரிவுக்குழுவை நியமிக்கவும் விளையாட்டுத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, உபுல் தரங்க தலைமையிலான தெரிவுக்குழுவில் சுழற்பந்து வீச்சாளர்களான தில்ருவான் பெரேரா, அஜந்த மெண்டிஸ் மற்றும் தரங்க பரணவிதான ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பல சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு தடை விதித்துள்ள நிலையில் இந்த மாற்றங்கள் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்