கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு

7 மார்கழி 2023 வியாழன் 09:04 | பார்வைகள் : 11872
கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த விமான பயணி ஒருவர், இன்று (07) அதிகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
துருக்கி செல்வதற்காக வந்திருந்த, மினுவாங்கொட பிரதேசத்தில் வசிக்கும் 59 வயதுடைய இவர் அதிகாலை 05.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை சூட்கேஸில் மறைத்து வைத்து வந்தவரே இவ்வாறு விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அங்கு விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் அவரது பயணப் பொதிகளை பரிசோதித்த போது துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1