பரிசில் தாக்குதல்! - சிறுவர் பூங்காவை இலக்கு வைத்த தாக்குதலாளி!!

7 மார்கழி 2023 வியாழன் 09:13 | பார்வைகள் : 8313
பரிசில் கடந்த சனிக்கிழமை பயங்கரவாத தாக்குதல் மேற்கொண்ட பயங்கரவாதி ஆர்மோன் (Armand R) என்பவர், இந்த தாக்குதலுக்கு முன்னதாக, சிறுவர் பூங்கா ஒன்றுக்குச் சென்றிருந்ததாக தெரியவந்துள்ளது.
பயங்கரவாதி ஆர்மோன் பரிஸ் 15 ஆம் வட்டாரத்தின் rue Nélaton வீதியில் உள்ள Vel d'Hiv நினைவு பூங்காவுக்குச் சென்றிருந்தார். பின்னர் அங்கிருந்து சென்று ஈஃபிள் கோபுரத்துக்கு அருகே வைத்து ஜெர்மனிய பிரஜை ஒருவரை கத்தியால் தாக்கியும், மேலும் இருவரை சுத்தியலால் தாக்கியும் காயப்படுத்தியிருந்தார்.
Vel d'Hiv நினைவு பூங்காவில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் அவர் இருந்தாரா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. இருந்தபோதும் அங்கு சென்று சில நிமிடங்கள் வரை இருந்தது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.