Paristamil Navigation Paristamil advert login

நாட்டை பிரிக்க திட்டம் தீட்டும் காங்., தலைவர்கள்: ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு

நாட்டை பிரிக்க திட்டம் தீட்டும் காங்., தலைவர்கள்: ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு

7 மார்கழி 2023 வியாழன் 13:22 | பார்வைகள் : 1596


நாட்டை பிரிக்க காங்கிரஸ் தலைவர்கள் வினோத திட்டம் தீட்டுவதாக பா.ஜ., மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் குற்றம் சாட்டினார்.

தெலுங்கானா முதல்வராக இன்று (டிச.,7) பொறுப்பேற்ற ரேவந்த் ரெட்டி, தேர்தலுக்கு முன்னதாக நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில், பீஹார் டிஎன்ஏ.,வை விட தெலுங்கானா டிஎன்ஏ சிறந்தது எனப் பேசியிருந்தார். இது அப்போது சர்ச்சையானது. இந்த நிலையில் பா.ஜ., மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத், ரேவந்த் ரெட்டியின் சர்ச்சை கருத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: நாட்டை பிரிக்க காங்கிரஸ் தலைவர்கள் வினோத திட்டம் தீட்டுகின்றனர். நாட்டை வடக்கு - தெற்கு என பிரிக்க தொடங்குகின்றனர். பீஹாரின் டிஎன்ஏ.,வை விட எங்கள் டிஎன்ஏ சிறந்தது என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியிருந்தார். ஆனால் அது குறித்து ராகுலோ, சோனியாவோ, பிரியங்காவோ இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ரேவந்த் ரெட்டியும் தனது கருத்தை திரும்ப்பெறவில்லை. இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்