Paristamil Navigation Paristamil advert login

காசா போர் நிறுத்தத்திற்கு இந்தியா முயற்சி செய்ய வேண்டும்: பிரியங்கா வலியுறுத்தல்

காசா போர் நிறுத்தத்திற்கு இந்தியா முயற்சி செய்ய வேண்டும்: பிரியங்கா வலியுறுத்தல்

7 மார்கழி 2023 வியாழன் 17:26 | பார்வைகள் : 1523


காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 16,000 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், விரைவில் போர் நிறுத்தத்தை உறுதிப்படுத்த இந்தியா தன்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து பிரியங்கா வெளியிட்டுள்ள அறிக்கை: தற்காலிக போர் நிறுத்தத்திற்குப் பின்னரும் காசா மீதான தனது தாக்குதல்களை இஸ்ரேல் மிகவும் வலுப்படுத்தியிருக்கிறது. உணவுப் பொருட்கள் பற்றாக்குறை, மருத்துவ வசதிகள் அழிக்கப்பட்டு, அடிப்படை வசதிகள் முடக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 10,000 குழந்தைகள், 60க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான மருத்துவ பணியாளர்கள் உட்பட 16,000 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தியா ஆரம்பத்திலிருந்தே பாலஸ்தீன மக்களுக்கு தன் ஆதரவை வழங்கி வருகிறது. ஆனால் இப்போது அனைத்து மக்களும் படுகொலை செய்யப்படும்போது ஒதுங்கி இருப்பதா?. விரைவில் போர் நிறுத்தத்தை உறுதிப்படுத்த நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும்.

ஒட்டு மொத்த தேசமே அழிந்து வருகிறது. இவர்களும் நம்மைப் போலவே கனவுகளும் நம்பிக்கையும் கொண்டவர்கள் தான். அவர்கள் இரக்கமின்றி நம் கண் முன்னே கொல்லப்படுகிறார்கள். எங்கே நம் மனிதாபிமானம்? இந்தியா சர்வதேச அரங்கில் எப்போதும் நியாயத்தின் பக்கமே துணை நிற்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் பிரியங்கா தெரிவித்துள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்