Paristamil Navigation Paristamil advert login

Yvelines : வணிக வளாகத்துக்குள் மோதல்! மூவர் காயம்!!

Yvelines : வணிக வளாகத்துக்குள் மோதல்! மூவர் காயம்!!

7 மார்கழி 2023 வியாழன் 13:44 | பார்வைகள் : 8068


பரிசின் புறநகர் பகுதியான Montigny-le-Bretonneux (Yvelines) இல் உள்ள வணிக வளாகம் ஒன்றில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அங்குள்ள SQY Ouest வணிக வளாகத்துக்குள் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி அளவில் நுழைந்த சிலர் அங்கு மோதலில் ஈடுபட்டனர். முகமூடி அணிந்த 20 பேர் வரை இந்த மோதலில் ஈடுபட்டதாகவும் இச்சம்பவத்தில் மூவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டைகள், இரும்பு கம்பிகள் போன்றவற்றால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். 

பின்னர் காவல்துறையினர் அழைக்கப்பட, சம்பவ இடத்துக்கு அவர்கள் வந்தடையும் முன்னர் தாக்குதலாளிகள் தப்பி ஓடியுள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்