கறிவேப்பிலை சாப்பிட்டால் உடல் எடை குறையுமா ?
7 மார்கழி 2023 வியாழன் 14:45 | பார்வைகள் : 2101
கறிவேப்பிலை வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிப்பதன் மூலமாக கொழுப்பை எரிப்பதற்கு உதவுகிறது. கறிவேப்பிலையில் உள்ள கார்பசோல் ஆல்கலாய்டுகள் உடல் பருமனுக்கு எதிரான பண்புகளை கொண்டுள்ளன. உடல் எடையை குறைப்பதை தவிர கறிவேப்பிலை செரிமானத்தை மேம்படுத்துவது, இதய நோய் ஏற்படுவதற்கான அபாயங்களை குறைப்பது மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளை குறைப்பதற்கு பயனுள்ளதாக அமைகிறது.
காலை வெறும் வயிற்றில் ஃபிரெஷ் ஆன கறிவேப்பிலையை வாயில் போட்டு மென்று சாப்பிடுவது ஏராளமான பலன்களை அளிக்கும். ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்தவும், உடலின் வளர்சிதை மாற்றத்தை துவங்கவும் இது உதவுவதாக நம்பப்படுகிறது.
நீங்கள் சமைக்கக்கூடிய உணவுகளில் முடிந்த அளவு கறிவேப்பிலையை சேர்த்துக் கொள்ளவும். குழம்பு, சூப் வகைகள் போன்றவற்றில் சேர்ப்பதோடு கறிவேப்பிலை பொடி, கறிவேப்பிலை சாதம் போன்றவற்றை செய்தும் சாப்பிடலாம்.
தண்ணீரில் ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலையை கொதிக்க வைப்பதன் மூலமாக கறிவேப்பிலை தேநீர் தயார் செய்யலாம். தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு இந்த தேநீரே பருகுவது உடல் எடையை குறைப்பதற்கு உதவும்.
கறிவேப்பிலை டீ தேநீர் ரெசிபி
* ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
* ஒரு டீஸ்பூன் சீரக விதை மற்றும் 10 முதல் 12 கறிவேப்பிலையை சேர்க்கவும்.
* இதனை 3 முதல் 4 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
* அடுப்பை அணைத்து 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
கறிவேப்பிலையில் உள்ள கொழுப்பை எரிக்கும் பண்புகள், சீரக விதைகள் மற்றும் மஞ்சளின் பலன்களோடு சேர்ந்து இந்த தேநீர் சிறப்பாக வேலை செய்கிறது. மஞ்சளில் காணப்படும் குர்குமின் திசுக்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது.
கறிவேப்பிலையில் வைட்டமின்கள் A, B, C, மற்றும் E, போன்றவற்றுடன் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு சத்து போன்ற தாதுக்களும் காணப்படுகிறது. இந்த இலைகளில் நிறைந்திருக்க கூடிய ஆன்டிஆக்சிடன்ட்கள் ஆக்சிடேட்டிவ் அழுத்தம் மற்றும் வீக்கத்தை எதிர்த்து போராடுகிறது.
சரிவிகித உணவு, அன்றாட உடற்பயிற்சி மற்றும் பிற ஆரோக்கியமான வாழ்க்கை முறை தேர்வுகளுடன் இணைந்து உடல் எடையை பராமரிப்பதற்கு கறிவேப்பிலை உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.