Ouigo , Intercités சேவைக்கட்டணங்களில் மாற்றம் இல்லை! - போக்குவரத்து அமைச்சர்!

7 மார்கழி 2023 வியாழன் 15:06 | பார்வைகள் : 5825
2024 ஆம் ஆண்டில் சில தொடருந்து போக்குவரத்து கட்டணங்களை விலை அதிகரிப்புக்கு உள்ளாகாது என போக்குவரத்து அமைச்சர் அறிவித்துள்ளார்,
குறிப்பாக குறைந்த விலைக் கட்டணமான Ouigo போக்குவரத்தில் விலை மற்றும் Intercités சேவைக்கட்டணங்களில் மாற்றம் இல்லை என போக்குவரத்து அமைச்சர் Clément Beaune அறிவித்துள்ளார்.
முன்னதாக, இல் து பிரான்சுக்குள் நவிகோ அட்டை மற்றும் மெற்றோ பயணச்சிட்டைகள் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளின் கட்டணங்கள் 2024 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து அதிகரிப்புக்கு உள்ளாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், Ouigo , Intercités பயணக்கட்டணங்களில் விலை அதிகரிப்புக்கு உள்ளாகாது எனும் அறிவிப்பு பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.