Périphérique : மணிக்கு 50 கி.மீ? - வேகக்குறைப்பை உறுதி செய்த போக்குவரத்து அமைச்சர்!

7 மார்கழி 2023 வியாழன் 17:00 | பார்வைகள் : 7391
புறநகர் சுற்றுவட்ட வீதியான Périphérique இன் அதிகபட்ச வேகம் மணிக்கு 50 கி.மீ ஆக மட்டுப்படுத்தும் தகவலை போக்குவரத்து அமைச்சர் Clément Beaune உறுதி செய்தார்.
முன்னதாக, சுற்றுவட்ட வீதியின் போக்குவரத்து வேகம் மணிக்கு 50 கி.மீ வேகமாக குறைப்பது தொடர்பில் பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ திட்டம் ஒன்றை முன்வைத்தார். ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் நாட்கள் முழுவதும் Périphérique வீதியின் வேகம் 50 கி.மீ ஆக மட்டுப்படுத்தப்பட உள்ளது. ஆனால், ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்ததன் பின்னரும், (2024 ஆம் ஆண்டு செப்டம்பரில் இருந்து) நிரந்தரமாக Périphérique வீதியின் போக்குவரத்து வேகத்தை மணிக்கு 50 கி.மீ ஆக குறைப்பது தொடர்பில் அந்த திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
அன்றில் இருந்து இந்த அறிவிப்பு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பல விமர்சங்களும் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில், போக்குவரத்து அமைச்சர் Clément Beaune, இன்று அதனை மீண்டும் உறுதிப்படுத்தினார். “"வேகத்தை குறைப்போம் என்பதை உறுதி செய்கிறேன்” என அவர் தெரிவித்தார்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025