காப்பீடு அட்டைகளை வாகனங்களில் காட்சிப்படுத்த தேவையில்லை! - புதிய சட்டம்!!
7 மார்கழி 2023 வியாழன் 18:05 | பார்வைகள் : 6606
வாகன காப்பீடு அட்டைகள் கண்ணாடிகளில் காட்சிப்படுத்தப்படும் கட்டாயத்தை அரசு விரைவில் தளர்த்த உள்ளது.
காப்புறுதி அட்டைகளை வாகனங்களின் முன் கண்ணாடிகளில் காட்சிப்படுத்துவது பிரான்சில் 1957 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. மிகவும் கட்டாயமான ஒன்றாக இருந்த இந்த சட்டம், விரைவில் நீக்கப்பட உள்ளதாக பிரெஞ்சு பொருளாதார அமைச்சர் Bruno Le Maire தெரிவித்தார்.
”அனைத்து மோட்டார் வாகனங்களும் இந்த காப்பீடு கடமைக்கு உட்பட்டவை. அது மாறாது. ஆனால், அதனை காட்சிப்படுத்தாமைக்கான அபராதம் இனிமேல் இல்லை. ஏனென்றால் காகித அச்சுப்பிரதி இனிமேல் வழங்கப்பட மாட்டாது!” என Bruno Le Maire தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இது நடைமுறைக்கு வருகிறது. காகித்தத்தில் அச்சிடும் முறையை நீக்கி, டிஜிட்டல் முறைக்கு மாற்றம் பெறுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.