Châtelet நிலையத்தில் தண்ணீர் கசிவு! - RER A, B மற்றும் D சேவைகள் பாதிப்பு!!
7 மார்கழி 2023 வியாழன் 18:33 | பார்வைகள் : 6597
Châtelet-les-Halles தொடருந்து நிலையத்தில் ஏற்பட்ட தண்ணீர் கசிவினை அடுத்து, RER சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இன்று வியாழக்கிழமை மாலை இந்த போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது. குறித்த நிலையத்தின் உள்கட்டமைப்பு கூரையில் உள்ள தண்ணீர் குழாய் வெடித்து அதில் இருந்து நீர் கசிவு ஏற்பட்டுள்ளது. அத்தோடு அது சமிக்ஞை கட்டுப்பாட்டினையும் செயலிழக்கச் செய்துள்ளது.
முதலில் மாலை 4.30 மணிக்கு போக்குவரத்து சீரடையும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் 6.30 மணி வரை தடை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் இன்று நாள் *முழுவதும் போக்குவரத்து தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
RER A, B மற்றும் C ஆகிய தொடருந்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. நாள் தோறும் 660,000 பயணிகள் பயணிக்கும் மிகப்பெரிய நிலையமான Châtelet-les-Halles இல் ஏற்பட்டுள்ள இந்த போக்குவரத்து தடை பயணிகளை பெரும் சிரமத்துக்குள்ளாக்கியுள்ளது.