Paristamil Navigation Paristamil advert login

என் சிந்தையில் அவள்….

என் சிந்தையில் அவள்….

8 மார்கழி 2023 வெள்ளி 02:36 | பார்வைகள் : 5098


அவள்

வார்த்தைகளின்
ஒலி வடிவத்தை
வற்ற செய்தவள்

பட படப்பாய் என்றும் என்
படர்ந்த மார்பினில் ஓர்
இறுக்கத்தை தருபவள்

சிந்திக்க சிந்திக்க
இதழினில் ஈரப்பதம் குறைந்திட
இரவெல்லாம் விழிக்க செய்பவள்

சிரிப்பதை யாரிடம் கற்றாளோ
எவற்றையும் ஈர்க்கும் வசீகரத்தை
நுணுக்கமாய் அதிலடக்கி யிருக்கிறாள்

எத்தனை எத்தனை உணர்வுகளோ
அத்தனையும் ஒரு சேர – நேராய்
எனை நோக்கி

அவள்

பார்வையாய் வார்த்தையாய்
அசைந்தாடும் கூந்தலின்
அழைக்கின்ற வாசமாய்

நித்தம் அந்த காற்றுடனே
வந்து சேரும் போது
என் செய்வேன்

இமைகளுக்கு விடுப்பு தந்து
காட்சிகளை கச்சிதமாய் கோர்வையாய்
சேமித்து கொள்கிறேன்

வர்த்தக‌ விளம்பரங்கள்