Paristamil Navigation Paristamil advert login

2024 டி20 உலகக்கோப்பையில் விராட் கோலிக்கு வாய்ப்பு அளிக்கப்படாது!

2024 டி20 உலகக்கோப்பையில் விராட் கோலிக்கு வாய்ப்பு அளிக்கப்படாது!

8 மார்கழி 2023 வெள்ளி 08:04 | பார்வைகள் : 5042


நடைபெறவிருக்கும் 2024 டி20 உலகக்கோப்பை தொடரில், இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலிக்கு வாய்ப்பு அளிக்கப்படாது என பிசிசிஐ திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஒரு நாள் உலக கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆயத்த நிலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் இஷான் கிஷன் 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலிக்கு பதில் மூன்றாம் வரிசை துடுப்பாட்ட வீரராக களமிறங்குவார் என வட இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

டி20 உலகக்கோப்பை குறித்து தென்னாப்பிரிக்கா தொடருக்கான அணித் தேர்வுக்கு முன்னதாக பிசிசிஐ உயர் அதிகாரிகள், தேர்வுக் குழு, கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் கலந்துரையாடி முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படடுள்ளது.

விராட் கோலி ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருப்பதால் அவரை அணியில் தேர்வு செய்ய வேண்டாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், அவரிடத்தில் விளையாட இஷான் கிஷனை ஆட வைக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இஷான் கிஷன் இதுவரை கிடைத்த வாய்ப்புக்களை நன்றாக பயன்படுத்தி அணிக்கு தேவையான பங்களிப்பினை செய்துள்ளதைால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மூன்றாம் வரிசை, மிடில் ஆர்டர் என இஷான் கிஷன் துடுப்பெடுத்தாட களமிறங்கிய எல்லா இடங்களிலும் அணிக்கு சிறந்த பங்களிப்பினை செய்துள்ளார்.

அண்மையில் நடந்த அவுஸ்திரேலிய டி20 தொடரில் மூன்றாம் வரிசையில் களமிறங்கி இரண்டு அரைசதம் அடித்துள்ளார்.

இதற்கு முன்னதாக டி20 உலகக்கோப்பை தொடரில் மூன்றாம் வரிசையில் ஸ்ரேயஸ் ஐயர் களமிறங்குவார் என தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்