அமேசன் காடுகளில் சட்டவிரோதமாக செயற்பட்ட தங்க சுரங்கங்கள் தகர்ப்பு
8 மார்கழி 2023 வெள்ளி 08:31 | பார்வைகள் : 3032
அமேசன் மழைக்காடுகளில் தங்கங்களை பிரித்து எடுப்பதற்காக பல்வேறு சட்டவிரோதமான தங்க சுரங்கங்கள் செயற்பட்டு இடம்பெற்று வருகின்றது.
சுமார் 1.5 மில்லியன் டொலர் அளவிலான தங்கம் பிரித்து எடுக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆனால் இவ்வாறு சட்டவிரோதமாக செயற்படும் தங்க சுரங்கங்கள், தங்கத்தை பிரித்து எடுப்பதற்காக பாதரசம் மூலம் ஆறுகளில் சுத்திகரிப்பு வேலையை செய்கின்றன.
இதனால் குடிநீர் வளமான ஆறு முற்றிலும் மாசுபடுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு வந்ததை அடுத்து, கொலம்பிய ஆயுதப்படை அமேசன் காட்டுக்குள் சோதனை வேட்டை நடத்தினர்.
இந்த சோதனையின் இறுதியில் அமேசன் காடுகளில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 19 தங்கச் சுரங்கங்களை கண்டுபிடித்தனர்.
பின், பிரேசிலும், அதனுடன் சேர்ந்த கூட்டு முயற்சியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 19 சுரங்கங்களையும் வெடி வைத்து தகர்த்து இருப்பதாக கொலம்பியா அரசு தெரிவித்துள்ளது.