வாய்ஸ் மெசேஜ்-லயும் அப்படி செய்யலாம்.. வாட்ஸ்அப்
8 மார்கழி 2023 வெள்ளி 08:35 | பார்வைகள் : 1679
வாட்ஸ்அப் செயலியில் குறுந்தகவல்களை ஒரு முறை மட்டுமே பார்க்க செய்யும் "வியூ ஒன்ஸ்" எனும் அம்சம் கடந்த 2021 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.
தற்போது இந்த அம்சம் செயலியின் வாய்ஸ் மெசேஜஸ் ஆப்ஷனிலும் சேர்க்கப்பட்டு இருக்கிறது.
இந்த வசதியை செயல்படுத்தினால், பயனர்கள் வாய்ஸ் மெசேஜ்களை ஒருமுறை மட்டுமே கேட்க முடியும்.
அதன் பிறகு, வாய்ஸ் மெசேஜ் சாட்-இல் இருந்து காணாமல் போகிடும்.
வியூ ஒன்ஸ் வாய்ஸ் மெசேஜ் அனுப்புவது எப்படி?
சாட் அல்லது க்ரூப் சாட் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்
மைக்ரோபோன் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்
இனி மேல்புறமாக ஸ்வைப் செய்து ரெக்கார்டிங்-ஐ க்ளிக் செய்ய வேண்டும்
ரெக்கார்டு ஆப்ஷனை அழுத்திப்பிடித்து ரெக்கார்டு செய்ய வேண்டும்
இனி 1 ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்
1 ஐகான் பச்சை நிறத்திற்கு மாறியதும் அது வியூ ஒன்ஸ் மோடில் இருப்பதாக அர்த்தம்
இனி குறுந்தகவலை அனுப்ப செய்யும் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்
வியூ ஒன்ஸ் ஆப்ஷனில் அனுப்பப்பட்ட குறுந்தகவல், மீடியா அல்லது வாய்ஸ் மெசேஜ்களில் நீங்கள் அவற்றை பார்த்துவிட்டதை குறிக்கும் ரிசீப்ட் காணப்படும். இவ்வாறு காண்பிக்கப்பட்டதும், அந்த தகவல்களை மீண்டும் பார்க்க முடியாது.
இந்த மெசேஜ்கள் எதுவும் சேமிக்கப்படாது. வாட்ஸ்அப் செயலியில் மற்ற மெசேஜ்களை போன்றே வியூ ஒன்ஸ் வாய்ஸ் மெசேஜ்களும் எண்ட்-டு-எண்ட் முறையில் என்க்ரிப்ட் செய்யப்படும் என வாட்ஸ்அப் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
வாட்ஸ்அப் செயலியில் வியூ ஒன்ஸ் வாய்ஸ் மெசேஜ் அம்சம் சர்வதேச அளவில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், வரும் நாட்களில் இந்த அம்சம் அனைவருக்குமான ஸ்டேபில் அப்டேட்டில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.