Paristamil Navigation Paristamil advert login

உடல்மொழிகளை வைத்தே உங்களை எடை போட முடியும்

உடல்மொழிகளை வைத்தே உங்களை எடை போட முடியும்

8 மார்கழி 2023 வெள்ளி 08:40 | பார்வைகள் : 2107


அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அது போலத்தான் நாம் யார் என்பது நம் உடல் மொழியிலேயே தெரிந்து விடும். ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய உடல்மொழி என்பது தனித்துவமானது. ஒருவருடைய உடல்மொழியே அவரின் மனநிலையை எளிதாக வெளிப்படுத்தும். நீங்கள் தனி ஒருவனா, ஆயிரத்தில் ஒருவனா? நீங்கள் யார் என்பதை உங்கள் உடல்மொழியே சொல்லிவிடும்.

1. பேசிக்கொண்டிருக்கும் பொழுது உதட்டை குவிப்பது, தாடையை சொறிவது, அடுத்து என்ன என்பது போல அவசரப்படுத்துவது போன்றவை உங்களுக்கு இதில் ஆர்வமில்லை என்பதை காட்டிக் கொடுத்து உங்கள் நண்பரை சலிப்படையச் செய்யும்.

2. நீங்கள் எந்த அளவுக்கு நேர்மையானவர் என்பதை நேரடியாக கண் பார்த்து பேசுவதன் மூலமே சொல்லி விட முடியும். மனிதனின் 70 சதவிகித தகவல் பரிமாற்றங்கள் உங்கள் சின்னச் சின்ன உடல்மொழிகளாலேயே பிறருக்கு கடத்தப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

3. இடுப்பில் கை வைத்துக்கொண்டு நிற்பது உங்கள் பொறுமையின்மையையும் உங்களுக்கு அந்த உரையாடலில் உள்ள ஆர்வமின்மையையும் வெளிக்கட்டுவதாக அமைந்துவிடும்.

4. நீங்கள் நின்று கொண்டிருக்கும் தோரணையும் உங்கள் உடல்மொழியை அழகாய் கடத்தும். நின்று கொண்டு பேசும்பொழுது பாதங்களின் திசையும் கூட நீங்கள் கிளம்ப தயாராக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்தும்.

5. போலியாக புன்னகை செய்வதை தவிருங்கள். எதேச்சையாக கடந்து செல்கையில் வேறொரு மன நிலையில் இருந்துகொண்டு பிறரை பார்த்து புன்னகை செய்யும் பொழுது அது இயல்பானதாக இருக்காது.

6. நாம் எப்படி நம் கருத்தை எதிரில் இருப்பவர் காது கொடுத்து கவனிக்க வேண்டும் என நினைக்கிறோமோ அது போலத் தான் பிறருக்கும் தோன்றும். உரையாடலின் போது பார்வையை வேறு பக்கம் செலுத்துவது, காதுக்குள் விரலை விட்டு எடுத்து அழுக்கு இருக்கிறதா? என பார்ப்பது போன்றவை எல்லாம், நம் மீதான நம்பிக்கையை சுத்தமாக துடைத்துப் போட்டுவிடும். 

பிறருடனான உரையாடலில் கண் பார்த்து பேசி பழகுங்கள். 

அதன் பிறகு உங்கள் மீதான நம்பிக்கை பிறருக்கு கொஞ்சம் கொஞ்சமாக உயர்வதை உணர்வீர்கள்.

பிறருடைய உடல் அசைவுகளை பொறுத்தே நம்மை வெளிக்காட்டுவோம். தனி ஒருவனாக இருப்பதற்கும், ஆயிரத்தில் ஒருவனாக கடந்து போவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது அல்லவா? மேலும் இதையெல்லாம் ஒரே நாளில் கடைபிடித்துவிட முடியாது தான். ஆனால் நம் உடலை, நாம் சொல்வதைத்தானே கேட்க வைக்க வேண்டும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்