'லியோ' படத்தை முகநூல் பக்கத்தில் வெளியிட்டாரா லோகேஷ் கனகராஜ்?

8 மார்கழி 2023 வெள்ளி 12:35 | பார்வைகள் : 3940
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ‘லியோ’ படம் அவரது அதிகாரப்பூர்வமான முகநூல் பக்கத்தில் முழுவதும் வெளியாகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘லியோ’. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் விமர்சன ரீதியாக இந்தப் படம் உலகம் முழுவதும் நல்ல வசூலைப் பெற்றது. மேலும், படம் வெளியாகி ஒருமாதமான நிலையில், கடந்த மாதத்தில் இந்தப் படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியானது. இந்த நிலையில், லோகேஷ் கனகராஜின் அதிகாரப்பூர்வமான முகநூல் பக்கத்தில் ‘லியோ’ திரைப்படம் வெளியாகியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இதுமட்டுமல்லாது, சில யூடியூப் பக்கத்திலும் இந்தப் படம் வெளியாகியுள்ளது. இதனைக் கண்டு ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இயக்குநர் லோகேஷ் கனகராஜின் முகநூல் பக்கத்தில் சிலர் ஹேக் செய்துள்ளது இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால்தான், ‘லியோ’ திரைப்படம் அவரது முகநூல் பக்கத்தில் வெளியாகியுள்ளது. விரைவில், இதற்கான நடவடிக்கை எடுத்து சரிசெய்யப்படும் எனவும் லோகேஷ் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.