Paristamil Navigation Paristamil advert login

வால்நட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றித் தெரியுமா?

வால்நட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும்  ஆரோக்கிய நன்மைகள் பற்றித் தெரியுமா?

8 மார்கழி 2023 வெள்ளி 12:50 | பார்வைகள் : 2054


தினசரி வால்நட்ஸ்களை சாப்பிடுவசத்தால் கிடைக்கும் சில முக்கிய ஆரோக்கிய நன்மைகளை இங்கே பார்க்கலாம்...

இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும்: அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனானது வால்நட்ஸிற்கு Heart-Check சர்ட்டிஃபிகேட் கொடுத்துள்ளது. இதன் பொருள் என்னவென்றால் இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும் உணவு என்பதற்கான இந்த அமைப்பின் அளவுகோல்களை வால்நட்ஸ் பூர்த்தி செய்திருக்கிறது என்பதாகும். வால்நட்ஸ்களில் சோடியம், சேச்சுரேட்டட் ஃபேட் மற்றும் ட்ரான்ஸ் ஃபேட் குறைவாக உள்ளது.

தவிர ஒவ்வொரு நாளும் உட்கொள்ள வேண்டிய தினசரி அளவில் குறைந்தது 10% வைட்டமின்கள் ஏ மற்றும் சி, இரும்பு, கால்சியம், புரதம் அல்லது டயட்ரி ஃபைபர் உள்ளது. இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க கூடியவை என்பதால் வால்நட்ஸ்கள் உடலில் உள்ள எல்டிஎல் கொலஸ்ட்ரால் அதாவது கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. கடந்த 2021-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் சுமார் 2 ஆண்டுகளுக்கு நாளொன்றுக்கு 2 சர்விங்ஸ் வால்நட்ஸ்களை எடுத்து கொண்டவர்களின் எல்டிஎல் கொலஸ்ட்ரால் லெவல் கணிசமாக குறைந்தது கண்டறியப்பட்டது.

நினைவாற்றலை மேம்படுத்துகிறது: விலங்குகள் மற்றும் மனிதர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவு கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியானது. இதில் வால்நட்ஸ்களை தொடர்ந்து சாப்பிடுவது நினைவாற்றல் மற்றும் மூளையின் செயல்பாட்டில் நேர்மறை விளைவுகளை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. தினமும் வால்நட்ஸ்களை சாப்பிடுவது அழற்சியை குறைக்கவும், ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களை தடுக்கவும் உதவும். ஃப்ரீ ரேடிக்கல்ஸ் செல்களை சேதப்படுத்துவதோடு காலப்போக்கில் அல்சைமர் மற்றும் டிமென்ஷியா பாதிப்புகள் ஏற்பட வழிவகுக்கும்.

மன அழுத்தத்தை குறைக்கும் : உங்கள் மனதை அமைதியாக வைத்து ரிலாக்ஸாக உணர் விரும்புகிறீர்களா.!! அப்படி என்றால் வால்நட்ஸ் சாப்பிடுங்கள். கடந்த 2022-ஆம் ஆண்டு நியூட்ரியண்ட்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவில், சுமார் 16 வாரங்களுக்கு நாளொன்றுக்கு 2 சர்விங்ஸ் வால்நட்ஸ் சாப்பிட்டு வந்தவர்களுக்கு மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு நிலைகள் குறைந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் நீண்ட நேரம் நிம்மதியாக தூங்கவும் மற்றும் அவர்களின் ஒட்டுமொத்த மன ஆரோக்கியத்தையும் வால்நட்ஸ்கள் மேம்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. வால்நட்ஸ்களில் மெலடோனின், ஃபோலேட், வைட்டமின் ஈ மற்றும் பாலிஃபினால்ஸ் உள்ளிட்ட நியூரோ-சப்போர்ட்டிவ் கலவைகள் நிறைந்துள்ளதால் மன ஆரோக்கியத்திற் இவை மிகவும் நன்மை அளிக்கிறது.

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: வால்நட்ஸ்கள் சாப்பிடுவதால் இரைப்பை குடல் அமைப்பில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் அதிகரித்து குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மதிப்பாய்வு ஒன்றில் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு ப்ரீபயாடிக்காக செயல்படும் திறனை வால்நட்ஸ்கள் கொண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்