Paristamil Navigation Paristamil advert login

திராவிட ஆட்சியில் ஏரிகள் மாயம்: அன்புமணி புகார்

திராவிட ஆட்சியில் ஏரிகள் மாயம்: அன்புமணி புகார்

8 மார்கழி 2023 வெள்ளி 17:14 | பார்வைகள் : 1525


திராவிட ஆட்சியில் சென்னையை சுற்றி உள்ள ஏரிகளை காணவில்லை என பா.ம.க., தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு இன்னும் விரைந்து செயல்பட வேண்டும். ஆங்காங்கே வேலை செய்து கொண்டுள்ளனர். ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பல முறை அரசுக்கு சொல்லியும் அதனை அரசு பெரிதுபடுத்தவில்லை.  எங்களுடைய நோக்கமே மக்கள் வளர்ச்சி தான்.

சென்னை சுற்றி உள்ள ஏரிகள் திராவிட ஆட்சி காலத்தில் காணவில்லை. அதன் மேல் தான் கட்டுமான பணிகளை கொண்டுள்ளனர். குடியிருப்புகள், ஆக்கிரமிப்புகள் நடந்துள்ளன. சென்னை புறநகரில், அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கட்டட அனுமதி கொடுத்தனர். இதனால், தான் வீட்டிற்குள் தண்ணீர் வந்துள்ளது. வடிகாலும் பராமரிப்பு இல்லாத காரணத்தினால், இன்று மிகப்பெரிய வெள்ளத்தில்  மிதக்கிறது. அடுத்த 5 அல்லது 6 ஆண்டுகளில் பெரிய வெள்ளம் வரும். அதற்கு பிறகு அடுத்த 3 ஆண்டுகளில் மீண்டும் மிகப்பெரிய வெள்ளம் வரும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்,  அரசின் தோல்வியாக பார்க்கப்படும்.

சென்னையை சுற்றி 100 கி.மீ., பரப்பளவில் 10 ஏரிகளை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு ஏரியும் 1 டிஎம்சி கொள்ளளவு கொண்ட ஏரியாகவும் உள்ளது. திண்டிவனம், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், மதுராந்தகம், கும்மிடிபூண்டி பகுதிகளில் ஏரியை உருவாக்க வேண்டும். மன்னராட்சியில் தான் உருவாக்க வேண்டுமா, மக்களாட்சியில் செய்யக்கூடாதா?  அப்படி ஏதும் உள்ளதா? இங்கு உள்ள வெள்ள நீரை கால்வாய் மூலம் அங்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி கூறினார். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்