நோர்து-டேம் தேவாலயத்தை திறந்துவைக்க பாப்பரசரை அழைக்கும் ஜனாதிபதி மக்ரோன்!
9 மார்கழி 2023 சனி 02:21 | பார்வைகள் : 5432
நோர்து-டேம் தேவாலயத்தின் திருத்தப்பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளன. அதன் கூரை வேலைப்பாடுகள் மட்டும் மீதமுள்ள நிலையில், இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அதனைச் சுற்றிப்பார்க்கச் சென்றிருந்தார்.
இந்த தேவாலயம் கடந்த 1019 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி தீவிபத்துக்குள்ளாகி எரிந்து சேதமடைந்திருந்தமை அறிந்ததே. ஐந்து ஆண்டுகளில் இத்தேவாலயத்தை மீள உருவாக்குவேன் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மிக வேகமாக திருத்தப்பணிகள் இடம்பெற்று வருகிறது. திருத்தப்பணிகளை பல தடவை நேரில் சென்று மக்ரோன் பார்வையிட்டிருந்தார்.
திருத்தப்பணிகளை முடித்துக்கொண்டு, 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் திகதி இந்த தேவாலயம் திறக்கப்பட உள்ளது. அதனைத் திறந்து வைக்க, பரிசுத்த பாப்பரசரை அழைக்கும் திட்டத்தின் உள்ளதாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் குறிப்பிட்டார்.