லூவர் அருங்காட்சியகத்தின் கட்டணம் அதிகரிப்பு!!
8 மார்கழி 2023 வெள்ளி 21:30 | பார்வைகள் : 10325
லூவர் அருங்காட்சியகத்தினை பார்வையிடுவதற்காக அறவிடப்படும் கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளது. ஜனவரி 15 ஆம் திகதி முதல் 5 யூரோக்களால் கட்டணம் அதிகரிக்கப்படுகிறது.
இன்று டிசம்பர் 8, வெள்ளிக்கிழமை இதனை லூவர் அருங்காட்சியகத்தினர் அறிவித்தனர். 17 யூரோக்களில் இருந்து 22 யூரோக்களாக நுழைவுக் கட்டணம் அதிகரிப்புக்கு உள்ளாகிறது.
2017 ஆம் ஆண்டில் முன்னதாக இந்த கட்டண அதிகரிப்பு இடம்பெற்றிருந்தது. அதன் பின்னர் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளின் பின்னர் தற்போது கட்டணம் உயர்வடைகிறது.
ஒலிம்பிக் போட்டிகளுகள் நடைபெறும் போது அதிகளவான பார்வையாளர்கள் பரிசுக்கு வருகை தரவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், பொது போக்குவரத்துக்கள், தங்குமிடங்களின் கட்டணங்களும் அதிகரிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், தற்போது லூவரின் கட்டணம் அதிகரிப்புக்குள்ளாகிறது.
2022 ஆம் ஆண்டில் லூவரினை காண 7.2 மில்லியன் பேர் வருகை தந்திருந்தனர். 76.5 மில்லியன் யூரோக்களுக்கு நுழைவுக்கட்டணம் விற்பனையாகியிருந்தது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan