உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியல்: முதலிடத்தில் மோடி
9 மார்கழி 2023 சனி 08:36 | பார்வைகள் : 3273
அமெரிக்காவின் ‛‛மார்னிங் கன்சல்ட் நிறுவனம் நடத்திய உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந் நிறுவனம் கடந்த நவம்பர் 29-ம் தேதி முதல் டிச.05ம் தேதி வரைஆராய்ச்சி அமைப்புடன் இணைந்து இந்த ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வில் பிரதமர் மோடி 76 சதவீதம் பேரின் ஆதரவை பெற்றுபிரபல தலைவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
18 சதவீதத்தினர் மோடியை ஆதரிக்கவில்லை. 6 சதவீதத்தினர் எந்தகருத்தும் தெரிவிக்கவில்லை.
தொடர்ந்து மக்கள் ஆதரவு பெற்றுள்ள உலகதலைவர்கள் விவரம்:
* மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவெல் லோபெஸ் ஓப்ரடோ 66 சதவீதம் ஆதரவுடன் 2-வது இடம் பிடித்துள்ளார்.
* சுவிட்சர்லாந்து அதிபர் அலைன் பெர்செட் 58 சதவீத ஆதரவுடன் 3-வது இடத்தில் உள்ளார்.
* அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 37 சதவீத ஆதரவு பெற்றுள்ளார்.
* கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 31 சதவீதம் ஆதரவு பெற்றுள்ளார்..
* பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் 25 சதவீத ஆதரவு பெற்றுள்ளார்.
* பிரான்ஸ் அதிபரான இம்மானுவேல் மேக்ரான் 24 சதவீத ஆதரவு பெற்றுள்ளார்.