Paristamil Navigation Paristamil advert login

306 இடங்களில் மழைநீர் அகற்றம்; இயல்பு நிலைக்கு திரும்ப போராடும் சென்னை புறநகர் பகுதிகள்

306 இடங்களில் மழைநீர் அகற்றம்; இயல்பு நிலைக்கு திரும்ப போராடும் சென்னை புறநகர் பகுதிகள்

9 மார்கழி 2023 சனி 11:55 | பார்வைகள் : 2546

சென்னையில் 306 இடங்களில் மழைநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில், இரண்டு நாட்களில், 8511 நடைகளில் லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது, என, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு கூறினார்.

சென்னையில், 190 பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியிருந்த நிலையில், இரவு, பகலாக அதிகாரிகள், ஊழியர்கள் பணியாற்றிதால், 137 இடங்களில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.

சென்னை மாநகராட்சியில் பகுதிகளில், 'மிக்ஜாம்' மற்றும் மழை வெள்ள பாதிப்புகளால், மணலி, திருவொற்றியூர், எண்ணுார், வேளச்சேரி, பள்ளிக்கரணை, மாம்பலம், ராயப்பேட்டை, புளியந்தோப்பு, கொளத்துார், திரு.வி.க.நகர் உள்ளிட்ட, 190 பகுதிகளில், மழை வெள்ளம் பாதிப்பு ஏற்பட்டது.

அந்த பகுதிகளில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னை மாநகாட்சி, காவல்துறை, மத்திய, மாநில தேசிய மீட்பு குழுக்கள், தீயணைப்பு துறை, மின்வாரியம், நீர்வளத்துறை, மீனவர்கள் உள்ளிட்ட பல்துறையை சார்ந்தவர்கள் தொடர்ந்து, மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில், இயல்பு நிலைக்கு திரும்ப பணியாற்றி வருகின்றனர்.

சென்னை மாநகராட்சியில், பெருங்குடி, ஆலந்துார், வளசரவாக்கம் போன்ற பகுதிகளில் மழை வெள்ள பாதிப்பு குறித்து, அமைச்சர் நேரு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இருந்தனர்.

பின், அமைச்சர் நேரு கூறியதாவது:

மழைநீர் தேங்கியிருந்த 363 இடங்களில் 1,162 மோட்டர் பம்புகள் வாயிலாக அகற்றப்பட்டது. 306 இடங்களில் மழைநீர் முழுமையாக அகற்றப்பட்ட நிலையில், 57 இடங்களில் மழைநீர் வெளியேற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

மாநகராட்சியில் பேருந்து தட சாலைகளில், 67 இடங்களில் மழைநீர் தேக்கம் இருந்தது. இதில், 57 இடங்களில் அகற்றப்பட்டுள்ளது. ஐந்து இடங்களில் அகற்றும் பணி நடந்து வருகிறது. அதேபோல், 22 சுரங்கப்பாதைகளும் மழைநீர் தேக்கமின்றி போக்குவரத்துக்கு பயன்பாட்டில் உள்ளது.

குடிநீர் வாரியம் சார்பில், 8,511 நடைகளில் லாரிகளில் குடிநீர் வினியோகிக்கப்பட்டுள்ளது. மேலும், கழிவுநீர் தேங்கிய 333 தெருக்களில், 160 கழிவுநீர் வாகனங்கள் வாயிலாக, 2,072 நடைகளில் அகற்றப்பட்டுள்ளது. இதுவரை, 324 கழிவுநீர் தேங்கியிருந்த தெருக்கள் சுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில், 65 நிவாரண முகாம்களில் 14,248 பேர் பேருக்கும், வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் 47.80 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. மாநகராட்சி சார்பில், 1.04 லட்சம் ரொட்டி பாக்கெட்டுகள், 7.02 லட்சம் குடிநீர் பாட்டில்கள், 8.48 லட்சம் பிஸ்கெட் பாக்கெட்டுகள், 51,733 பால் பவுடர் பாக்கெட்டுகள், 14,574 பால் பாக்கெட்டுகள், 61,380 கிலோ அரிசி, 1,739 கிலோ பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

மாநகராட்சி பகுதியில், 1,512 மரங்கள் விழுந்துள்ளன. அவற்றில், 1,303 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள 209 மரங்களை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன.

மழைக்கால நோய்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், நடமாடும் மருத்துவ முகாம்கள் வாயிலாக, 77,663 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தண்டையார்பேட்டை மண்டலத்தில் நேற்று நடந்த நிவாரணப்பணிகள் ஆலோசனை கூட்டத்தில், அமைச்சர்கள் சேகர்பாபு, கே.ஆர்.பெரிய கருப்பன், அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், வடசென்னை எம்.பி., கலாநிதி வீராசாமி, எம்.எல்.ஏ.,க்கள் எபினேசர், ஆர்.டி.சேகர், மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஆர்.கே.நகரில், 38வது வார்டு, 41வது வார்டு, 42வது வார்டு, 47வது வார்டு அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. நீர் தேங்கிய இடங்களில் ஜெட்ராடிங் இயந்திரங்களை கொண்டு நீரை அகற்றுவது குறித்தும், நீர்வடிந்த இடங்களில்  குப்பையை அகற்றி ப்ளீச்சிங் பவுடர் தெளிப்பது, நிவாரண பொருள்கள் வழங்குவது குறித்து,ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

குடியிருப்புகளில் மழை வெள்ள பாதிப்பு

பால் விற்பனை

சென்னையில் உள்ள எட்டு ஆவின் ஹைடெக் பாலங்களில், 24 மணிநேரமும் பால் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்த விவரம்:அம்பத்துார் பால் பண்ணை நுழைவாயில்மாதவரம் பால் பண்ணை ஆவின் இல்லம்அண்ணாநகர், குட்னஸ் டவர் பார்க்பெசன்ட் நகர், வண்ணான்துறைஅண்ணாநகர் கிழக்கு,வசந்தம் காலணி, 18 வது மெயின் ரோடுசோழிங்கநல்லுார் பால் பண்ணைவிருகம்பாக்கம்-வளசரவாக்கம் மெகா மார்ட் அருகில்.மயிலாப்பூர், சி.பி. ராமசாமி சாலை

நீர்நிலைகள் துார்வாரதது முக்கிய காரணம்

சென்னையில் குடியிருப்புகளில் மழை வெள்ளம் பாதிப்பு ஏற்பட்டதற்கு அடையாறு, பகிங்ஹாம் மற்றும் கிளை கால்வாய்களை முறையாக துார்வாரததது முக்கிய காரணம் என, மாநகராட்சி அதிகாரிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 'மிக்ஜாம்' புயல் மற்றும் மழையால் பல்வேறு இடங்களில், வெள்ளத்தில் மூழ்கி மாநகரம் தத்தளித்தது. பல இடங்களில் மழைநீர் வடிந்த நிலையில், சில இடங்களில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து, பொதுமக்கள் தத்தளித்து வருகின்றனர்.

கிளை கால்வாய்களை நீர்வளத்துறை மற்றும் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மற்றும் சென்னை மாநகராட்சி முறையாக துார்வாரததே வெள்ள பாதிப்புக்கு முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

அதிக மழை பெய்த நிலையில், கிளை மற்றும் பிரதான கால்வாய்களில் மழைநீர் சென்றிருந்தால், பல பகுதிகள் பாதிக்கப்படுவது குறைந்திருக்கும். குறிப்பாக, 1.30 லட்சம் கன அடி நீர் செல்லக்கூடிய அடையாற்றில், பல இடங்களில் துார்வாரததால், 30 கன அடி நீர் மட்டுமே சென்றது. அதேபோல், ஓட்டேரி நல்லா கால்வாயில், 1,000 கன அடி செல்லக்கூடிய இடங்களில், 500 கன அடி நீர் கூட செல்லவில்லை.

அதேபோல் போல், பகிங்ஹாம் மற்றும் 32 கிளை கால்வாய்களும் முறையாக துார்வாரப்படாதாதல், மழைநீர் செல்லாமல், நிரம்பி குடியிருப்புகளில் மழை வெள்ளம் புகுந்தது.

அ.தி.மு.க., ஆட்சியில் கிளை கால்வாய்களை துார்வார 1,200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, ஒப்பம் கோரப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்குப்பின், அது கைவிடப்பட்ட நிலையில், பெரும்பாலான கால்வாய்கள், மழைநீர் வடிகால்கள் முறையாக துார்வாரப்படவில்லை. இதன் காரணமாகவே, பிரதான நீர்நிலைகள், கிளை கால்வாய்கள் நிரம்பி, குடியிருப்புகளில் மழைநீர் தேங்கியது.

மழைநீர் வடிகால் துார்வாருவதுபோல், பிரதான மற்றும் கிளை கால்வாய் என அனைத்தும் ஆண்டுக்கு இரண்டு முறையாவது துார்வாரி பராமரிக்க வேண்டும். அங்கு, குப்பை, கட்டட கழிவுகள் கட்டுவதையும் தடுத்தால், வரும் காலங்களில் பெரிய அளவிலான பாதிப்புகளை தடுக்க முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்